.>>> ரைஸ் புல்லிங் 🚫 <<< ||| >>> கலசம் புல்லிங் ✅ <<<



இது வரையில் நாம் CERN, LHC, particle accelerators பார்த்து தெரிந்தவற்றை அப்படியே படக் காட்சிகளாக எடுத்து உண்மைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். ஆனாலும் கலசத்தின் இந்த தன்மையை “நம்மிடம்” இருந்து மறைப்பதற்குத் தான் இந்த போலி ரைஸ் புல்லிங் காட்சிகள். கீழே உள்ள வீடியோவை பாருங்கள் புரியும்.

வாருங்கள் ஏமாறுவோம்

இந்த படத்தின் காட்சிகள் கோவில் கலசம் அரிசி இழுப்பது ஒரு மோசடி என்று நம்மை நினைக்க வைக்கிறது. இந்த காட்சிகள் பணத்திற்கான மதிப்பை அதிகரிக்கின்றன மற்றும் கோவில் கலசத்தை மோசடிக்கு பயன்படுத்தப்படும் ஒரு கேலிப் பொருளாக சித்தரிக்கின்றன.

உண்மையான மோசடி என்ன தெரியுமா? அந்த கலசத்துக்கு எந்த சக்தியும் இல்லையென்று நம்மை நம்ப வைக்கிறார்களே அது தான் !

திரைப்படக் காட்சிகளில் உலோகத்தால் செய்யப்பட்ட அரிசியையும், கலசத்திற்குள் சில காந்தப் பொருட்களையும் வைத்து, அதுதான் இழுக்கும் சக்தியை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறார்கள்.

இன்னொரு படத்தில், கோவில் கலசத்திற்கு இப்படிப்பட்ட தன்மைகள் இருக்கிறதென்ற உண்மையை சொல்கிறார்கள்.

ஏன் இப்படிச் செய்கிறார்கள்?

அறிவியல் பூர்வமாக கோவில் கலசத்தின் உண்மையான பண்புகளை போலியாக சித்தரித்து அதை மட்டம் தட்டுவதே அவர்கள் நோக்கம், அதை ஒரு அலங்காரப் பொருளாக மட்டுமே எல்லோரும் கருதவேண்டும் என்ற நோக்குத்துடன் இந்த காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன.

அப்போ ரைஸ் புல்லிங் போலியா?

உண்மையில் ரைஸ் புல்லிங் வேலை செய்கிறது.

கோவில் கலசம் ஒரு மோசடி பொருள் என்று ரைஸ் புல்லிங் போல் நடித்து, மக்களுக்கு கோவில்கள் மீது அவநம்பிக்கையும், தங்கள் மன்னர்களின் மீது வெறுப்பையும் வர இப்படி மட்டம் தட்டி படம் எடுத்துள்ளனர். ஆனால் உண்மையில் அவர்கள் தமிழ் மன்னர் கோயில்களில் இருந்து “கலசம் புல்லிங்” செய்துள்ளனர்.

கலசம்

கலசம் புல்லிங்

எதற்க்காக எப்படி செய்கிறார்கள்?

தமிழ் மன்னர்களின் கோவில் பொருட்களை திருடி, ஏதோ அவர்கள் தான் கண்டுபிடித்தது போல காட்டி திருட்டு பெருமை தேடிக்கொள்ள தான் இப்படி செய்கிறார்கள்.



2000 வருஷத்துக்கும் மேல தமிழ் மன்னர்கள் கட்டி வைச்சிருந்த கோவில்ல இருந்து
“கலசம் புல்லிங்” செஞ்சிட்டு இதுக்கு பேரு லேட்டஸ்டு டேகுனாலஜி மெஷினு.
புல்லிங் பண்ணிட்டு அதுல ஒண்ணுமில்ல, அது மூடப் பழக்கம்னு படம் எடுத்துக் காட்டுறானுங்க. கூச்சமே இல்ல?

“கலச புல்லிங்” பாவ காரியம் என்றும் மறைந்துவிடாது. அது எப்படியோ வெளி வந்துவிடும்!

பகவான் கிருஷ்ண பரமாத்மா

கடவுளை கண்டார்களா ?

விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களைக் கண்டுபிடித்தனர், ஆனால் அவற்றின் நிறை எதனால் ஏற்பட்டது என்று அவர்களுக்குத் தெரியவில்லை? நிறை இல்லாத துகள்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக நகரும். அந்த கட்டுப்பாடுகள் எதனால் ஏற்பட்டது என்பது ஒரு மர்மமாகவே இருந்தது (1964 இல் பீட்டர் ஹிக்ஸ் கோட்பாட்டளவில் ஹிக்ஸ் புலம் போன்ற மற்றொரு அடிப்படை புலம் இருக்கலாம் என்று கூறினார்), 2012 வரை.

ஒரு புதிய பகுதியில் என்ன இருக்கிறது என்பதை அறிய நாம் முதலில் கற்களை எறிந்து எதிர்வினைகளைக் கவனிக்கிறோம். நீர்நிலை இருந்தால் நாம் தண்ணீர் தெறிப்பதைக் கேட்கிறோம், பாறைகள் இருந்தால் பாறை மோதும் சத்தத்தைக் கேட்கிறோம், சேறு இருக்கும்போது ஒரு அமைதி கேட்கிறோம்.

இதேபோல் LHC இல் ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது, ஒரு புரோட்டானையும் மற்றொரு புரோட்டானையும் மோதச் செய்வதன் மூலம் அவை புலங்களுடன் தொடர்பு கொள்ளும், இதன் விளைவாக ஏற்படும் தெறிப்பைக் காண முடியும், சோதனை தேவையான முடிவைக் கொடுத்தது, 125 GeV நிறை கொண்ட ஒரு புதிய துகள் LHC இல் காணப்பட்டது. இது பிரபஞ்சம் முழுவதும் ஹிக்ஸ் புலம் இருப்பதற்கான உறுதியான ஆதாரத்தை அளித்தது.

கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்

இது ஏன் கடவுள் துகள் என்று அழைக்கப்படுகிறது? ஏனென்றால் அது எல்லா இடங்களிலும் உள்ளது, மேலும் அது ஹிக்ஸ் புலத்துடன் தொடர்பு கொள்ளும்போது துகள்களுக்கு அவற்றின் நிறை அளித்தது. புரோட்டான், எலக்ட்ரான்கள் எங்கு சென்றாலும் அவை ஹிக்ஸ் புலத்துடன் தொடர்பு கொண்டு நிறை பெறுகின்றன, எனவே இது கடவுள் துகள் என்று அழைக்கப்படுகிறது. இதை “GOD DAMN துகள்” என்று அழைக்கும் மற்றொரு அதிகாரப்பூர்வ விளக்கம் உள்ளது.

கடவுளின் துகளைக் கண்டுபிடிக்க என்ன கூறுகள் பயன்படுத்தப்பட்டன?

நவீன அறிவியல் தமிழ் மன்னர் கோயில்கள்
 காந்தம்  கிரானைட்
 செப்பு சுருள்  நமது உடல் கடத்தியாக
 SRF Cavity  கலசம்
 புரோட்டான் மூலம்  விண்வெளித் துகள்கள்

ஹிக்ஸ் போஸான் தான் கடவுளா?

இல்லை, நான் ஹிக்ஸ் போஸான் கடவுள் என்று சொல்ல வரவில்லை. கடவுளைக் வணங்கவும், மக்களின் உயிர் ஆற்றலை சீர் செய்யவும், தமிழ் மன்னர் கோயில்களின் அதே கூறுகளைப் LHC விஞ்ஞானிகள் பயன்படுத்தினார்கள் என்றும், அவர்களின் கண்டுபிடிப்பு பற்றிய அறிக்கைகள் மட்டுமே நான் சொன்னேன்.

அவர்கள் கடவுளை கண்டார்களா என்றும் சொல்லவில்லை. அவர்கள் அந்த துகளை கடவுளின் துகள் என்றும் கடவுள் சாபம் பெற்ற துகள் என்று இரு வேறு கருத்துக்களை சொல்லி குழப்பம் செய்கிறார்கள்.

CERN-ல் வேறு என்ன செய்தார்கள்?

நீங்களே பாருங்கள்.

CERN, ஒரு அறிவியல் பிராந்தியத்தில் ஏன் இந்த வினோதமான நடனமும், கோரமான நாடகமும்? அவர்கள் உலகிற்கு என்ன சொல்கிறார்கள்? இதிலிருந்து நாம் ஒரு தெளிவான முடிவுக்கும் வர முடியாது, எதையும் யூகிக்க முடியாது. நாம் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது.

அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் என்று பரிந்துரைக்கிறேன்.

ஆனாலும் அவர்கள் நமது சிவபெருமானை இறைவன் என்று அழைக்கின்றனர். எப்படி, எதனால் என்று சொல்லவில்லை.


இந்த CERN திட்டத்திலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ள முடியும்?

தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய அடிப்படை பொருட்களை வைத்து, CERNல் அவர்கள் செய்த ஆராய்ச்சியில் இருந்து பலவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.

நமக்கு கிடைத்த முக்கிய விடயம் இது தான்.

LHC நிலத்தடியில் கட்டப்பட்டது, பல முடுக்கிகள் மற்றும் கண்டுபிடிப்பான்களைக் கொண்டுள்ளது.

துகள் முடுக்கிகள் மற்றும் கண்டுபிடிப்பான்களுடன் கூடிய LHC இன் வரைவு.

ஹைட்ரஜனில் இருந்து வரும் புரோட்டான்கள் முதலில் LINAC இல் 50 MeV ஆகவும், பின்னர் புரோட்டான் சின்க்ரோட்ரான் பூஸ்டரில் 1.5 GeV ஆகவும், பின்னர் புரோட்டான் சின்க்ரோட்ரானில் 26 GeV ஆகவும், சூப்பர் புரோட்டான் சின்க்ரோட்ரானில் 450 GeV ஆகவும் நேரியல் முறையில் முடுக்கிவிடப்படுகின்றன. கடைசியாக புரோட்டான்கள் LHC க்குள் செலுத்தப்படுகின்றன, அங்கு SRF குழிகள் (கலசம்) துகள்களை 7 TeV ஆக துரிதப்படுத்தும் மின்சார புலத்தை வழங்குகின்றன.

LHC Acceleration

மின்சாரம் மற்றும் காந்தப்புலங்களில் வட்டப் பாதையில் நகர்வதன் மூலம் துகள்கள் ஆற்றலைப் பெறும்.

நமது கோயில் பிரகார வலம் பாதை

நமது கோயில்களில் இதுதான் நடக்கிறது, கலசம் (SRF cavity) மின்சார புலங்களை வழங்குகிறது, அதே நேரத்தில் கிரானைட்டால் ஆன கோயில் சுவர்கள் காந்தப்புலங்களை உருவாக்குகின்றன. துகள்களைப் போலவே, கோயிலைச் சுற்றி ஒரு வட்ட இயக்கத்தில் நாம் நகருகிறோம், இதன் மூலம் LHC இல் உள்ள புரோட்டான்களைப் போன்ற ஆற்றலைப் பெறுகிறோம்.

மக்களுக்கு உயிர் ஆற்றல் சிகிச்சை மட்டும் தான் கோவில்களா?

இல்லை CERNவிட பல்லாயிரம் மடங்கு அறிவாற்றல் பெற்றவர்களால் கோவில்கள் கட்டப்பட்டன. கடவுள் என்பது சக்தி/உயிர் சக்தி அதை LHC துகள் கண்டுபிடிப்பான்கள் உணர்வது போல, மனிதர்களும் உணர்வார்கள். LHCல் எந்த மூலப் பொருள் புரோட்டான்களை தருகிறது? ஹைட்ரஜன் வாயு. அதே போல கோயில்களில் எந்த மூலப் பொருள் துகள்களை தருகிறது? மூலவர் என்று ஒருவர் எதற்கு இருக்கிறார்?

நமக்கு பல்லாயிர வருடங்கள் உடல் மற்றும் மன நலனை காக்க கோவில்களை கொடுத்துச் சென்றுள்ளனர் நமது தமிழ் மன்னர்கள்.

கோவிலில் கடவுளை தேடிய அறிவியல்



CERN, அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு

1954 இல் நிறுவப்பட்ட CERN இல் உள்ள இயற்பியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி, பொருளின் அடிப்படை கூறுகளை - அடிப்படை துகள்களை(புரோட்டான்கள், நியூட்ரான்கள்) - ஆய்வு செய்கிறார்கள். துணை அணு துகள்கள் ஒளியின் வேகத்திற்கு அருகில் மோதுகின்றன. இந்த செயல்முறை துகள்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது பற்றிய துப்புகளை நமக்கு வழங்குகிறது, மேலும் இயற்கையின் அடிப்படை விதிகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

LHC Large hadron collider இன் மொத்த அளவு

27 கி.மீ. அனைத்தும் செப்பு சுருள்கள் மற்றும் காந்தம்

லார்ஜ் ஹாட்ரான் கொலிடர் (LHC) உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த துகள் முடுக்கி ஆகும். இது முதன்முதலில் செப்டம்பர் 10, 2008 அன்று தொடங்கப்பட்டது, துகள்களின் ஆற்றலை அதிகரிக்க பல முடுக்கி கட்டமைப்புகளுடன் கூடிய 27-கிலோமீட்டர் மீக்கடத்தும் காந்தங்களின் வளையத்தைக் கொண்டுள்ளது.

CERN அதாவது அறிவியல் @ விஞ்ஞானம் நமது சிவனை இறைவன் என்று அழைக்கிறது



CERN, அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பில்  சிவன் சிலை

அறிவியலில் ஒரு முக்கிய சிகரமான, CERN நமது சிவனை இறைவன் என்று அழைக்கிறது.

[முக்கிய குறிப்பு: சிவபெருமானின் சிலையை தவிர வேறு எந்த மதக்குறிப்பு சிலையும் அங்கில்லை!]

2004 ஆம் ஆண்டு இந்திய அரசு CERN நிறுவனத்திற்கு ஒரு உயரமான சிவன் சிலையை பரிசாக வழங்கியது. சிலையைப் பெற்றுக்கொண்ட பிறகு CERN அதை இறைவன் சிவபெருமான் என்று குறிப்பிட்டது.

அறிவியலில் ஒரு முக்கிய சிகரமான, CERN ( அங்குதான் சிறந்த விஞ்ஞானிகள் பிரபஞ்ச விதிகளின் அடிப்படைகளைக் கண்டுபிடிக்கின்றனர், அங்குதான் இன்டர்நெட் (WWW) உருவாக்கப்பட்டது) நமது சிவனை இறைவன் என்று அழைக்கிறது.

இந்த சிலை ஏன் பரிசாக வழங்கப்பட்டது?

நடனமாடும் சிவபெருமானின் இந்த வடிவம் நடராஜர் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது சக்தி அல்லது உயிர் சக்தியைக் குறிக்கிறது. சிலைக்கு அருகில் உள்ள ஒரு தகடு விளக்குவது போல, சிவபெருமான் பிரபஞ்சத்தை நடனமாடி, அதை உந்தினார், இறுதியில் அதை அணைப்பார் என்பது நம்பிக்கை. நடராஜரின் அண்ட நடனத்திற்கும் துணை அணு துகள்களின் ‘அண்ட நடனம்’ பற்றிய நவீன ஆய்விற்கும் இடையிலான உருவகத்தை கார்ல் சாகன் வரைந்தார்.

அணு ஆராய்ச்சிக்காக CERN-இல் பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகள்

  1. டன் கணக்கில் காந்தங்கள்
  2. டன் கணக்கில் சுருண்ட செம்பு
  3. பல்வேறு மூலங்களிலிருந்து புரோட்டான்கள், நியூட்ரான்கள்
  4. மின் ஆற்றல்
  5. கலசம் என்றழைக்கப்படும் SRF.
காந்தங்கள்

சுருண்ட செம்பு

கலசம் @ SRF Cavities

மேலே கூறப்பட்ட பொருட்கள், கோயில்களில் பயன்படுத்தப்படும் அதே அடிப்படைப் பொருட்கள்.

தமிழ் மன்னர்கள் எந்த அடிப்படிப் பொருட்களை கொண்டு கோவிலை கட்டி கடவுளை வழிபட்டார்களோ, நம்மையும் வழிபட செய்து நமது உயிர் ஆற்றலை மேன்மை அடைய செய்தார்களோ.அதே பொருட்களை வைத்து நவீன அறிவியல் கடவுளை தேடியது.

அறிவியல் கடவுளைக் கண்டுபிடித்ததா?

[அறிவியலில் ஒரு முக்கிய சிகரமான, CERN நமது சிவனை இறைவன் என்று அழைக்கிறது.]