உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே!



நமக்கான உயிர் சக்தி எங்கிருந்து கிடைக்கிறது?

எல்லா உயிரினங்களுக்கும் உயிர் சக்தி பிரபஞ்சத்திலிருந்து வருகிறது. பிரபஞ்சத்தில் உயிர் சக்தியின் ஆதாரம் என்னவென்று நமக்குத் தெரியாது. அது பூமியின் காந்தப்புலத்திலிருந்து வருகிறதா அல்லது சூரியன், சந்திரன், வியாழன் அல்லது பிரபஞ்சத்தின் எந்த உறுப்பு உயிர் சக்தியின் அடிப்படையை உருவாக்குகிறது என்பது தெரியவில்லை. அனைத்து உயிரினங்களும் மேற்கூறிய கூறுகளும் பிரபஞ்சத்தில் அடங்கியிருப்பதால், உயிர் சக்தி பிரபஞ்சத்திற்குள் பகிரப்படுகிறது அல்லது வழங்கப்படுகிறது அல்லது வலுக்கட்டாயமாக உருவாக்கப்படுகிறது என்று நாம் முடிவு செய்யலாம்.

நமது முன்னோர்கள் இந்த உயிர் சக்தி சக்தியைப் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டுபிடித்திருக்கலாம், அது நம்மை தீப ஆராதனைக்கு இட்டுச் செல்கிறது. 1860 க்குப் பிறகு இது ஜப்பானில் ரெய்கியாகவும் சீனாவில் லிங்க்ச்சியாகவும் உருவாகிறது.




நவீன அறிவியலில் ச்சி காயில் (இண்டக்க்ஷன் காயில்) அதன் சமமான சோ கு ரெய் (ரெய்கி)

இண்டக்க்ஷன் காயில் மற்றும் சோ கு ரெய் கை  வாட்டம்

இண்டக்ஷனின் காயில் எப்படி வேலை செய்கிறது?

இண்டக்க்ஷன் காயில் எப்படி வேலை செய்கிறது

முதன்மை காயில் (Transmitter Coil): இது சார்ஜிங் பேட் அல்லது சார்ஜர் உள்ளே இருக்கும். இதில் மாற்று மின்சாரம் (AC) பாய்ந்து ஒரு மாறும் காந்தப்புலத்தை உருவாக்குகிறது(Faraday’s Law). இந்த காந்தப்புலம் சார்ஜிங் பேட் மற்றும் சாதனத்திற்கு இடையே உள்ள குறுகிய இடைவெளியைக் கடந்து, இரண்டாம் நிலை காயிலை அடைகிறது.

இரண்டாம் நிலை காயில் (Receiver Coil): இது சார்ஜ் செய்யப்படும் சாதனத்தில் (எ.கா., ஸ்மார்ட்ஃபோன்) இருக்கும். இது முதன்மை காயிலால் உருவாக்கப்பட்ட காந்தப்புலத்தைப் பெற்று மின்சாரத்தை தூண்டுகிறது. இரண்டாம் நிலை காயிலில் மாறும் காந்தப்புலம் மின்சாரத்தை தூண்டுகிறது. இந்த மின்சாரம் மாற்றி (rectified) DC ஆக மாற்றப்பட்டு, சாதனத்தின் பேட்டரியை சார்ஜ் செய்ய பயன்படுகிறது.

சுருள்களைப் பயன்படுத்தி சார்ஜரிலிருந்து தொலைபேசிக்கு மின் ஆற்றல் கடத்தப்படுகிறது.

ஆற்றலை (இந்த விஷயத்தில் மின்சார மூலத்திலிருந்து வரும் மின் ஆற்றல்) ஒரு ஊடகம் (செப்பு சுருள்) மூலம் ஒரு பொருளுக்கு கடத்த முடியும். அதேபோல், சோ கு ரெய் (கையை ஊடகமாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு சுருள்) மூலம் பிரபஞ்சத்திலிருந்து மனித உடலுக்கு ஆற்றல் கடத்தப்படுகிறது.

சோ கு ரெய் மூலம்  பிரபஞ்சத்திலிருந்து மனித உடலுக்கு ஆற்றல் கடத்தப்படுகிறது

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே!

விளக்கங்கள் கண்டு நாம் தீப ஆராதனை செய்யும் காரணம் முழுமையாக புரிந்துவிட்டதா?


நாம் ஏன் தீப ஆராதனை செய்கிறோம் என்று புரிந்துகொண்டீர்களா?

இந்த ஆற்றல் சிகிச்சை முறையை வேறு எப்படியெல்லாம் நாம் கோவில்களில் பின்பற்றுகிறோம் என்று நாளை பார்க்கலாம்.

தீப ஆராதனை வழிமுறை





தீப ஆராதனை காட்டும் போது, முதலில் மேலிருந்து கீழே தீபத்தை இறக்குவோம். பிறகு கடிகார சுழற்சியை போல மூன்று முறை தீபத்தை தெய்வத்தின் சிலையோ அல்லது படத்தையோ முன்னால் சுழற்றியும், எதிர் திசையிலும் சுழற்றியும் அந்த தீபத்தை தொட்டு வணங்குவோம்.

ஆராதனை கை வாட்டம்

நாம் தீப ஆராதனை செய்யும் போது, கை போகும் வாட்டத்தை ஒரு எழுதுகோலால் வரைந்தால் இப்படி இருக்கும்.

இந்த கை வாட்டத்தின் பெயர் “ச்சோகுரேய்”, இது ரெய்கி(Reiki) சிகிச்சையின் ஒரு அங்கமாகும். ரெய்கி சிகிச்சை என்பது உயிர் ஆற்றலை சீராக்கும் சிகிச்சையாகும். இந்த சிகிச்சை முறையை ஜப்பானில் ரெய்கி என்றும் சைனாவில் லிங்சீ என்றும் அழைப்பர்.

ஒவ்வொரு நாளும் நமது அன்றாட பணிகளாலும், பல்வேறு சுமைகளாலும் நமது உயிர் ஆற்றல் குறைந்து வலிமை இழக்கிறோம். அதற்கான உயிர் ஆற்றல் சிகிச்சை முறை தான் இந்த ரெய்கி. உலகெங்கிலும் இந்த சிகிச்சை முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரெய்கி சிகிச்சை முறையில் இந்த கை வாட்டங்கள் உடலில் உயிர் ஆற்றலை சீர் செய்கிறது, அதே போல் நமது கோவில்களிலும், குல தெய்வ சிலைகளுக்கு தீப ஆராதனை செய்யும்போது நமது உயிர் ஆற்றல் சீர் செய்யப்படுகிறது.

இது தான் நாம் தீப ஆராதனை செய்யும் காரணம்!



திரு.மிகாஓ உசூயி

ஜப்பானில் இந்த சிகிச்சை முறையை திரு.மிகாஓ உசூயி தொடங்கினார். இவர் 1865ல் பிறந்தார் சமுராய் வம்சாவழியில் பிறந்த இவர் அந்த பராம்பரியத்திலேயே வளர்க்கப்பட்டார்.

கி.பி 1860களுக்கு பிறகு தான் இந்த முறை உருவாக்கப்பட்டது. ஆனால் நம் முன்னோர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த முறையை நமக்கு கடத்தி, பழக்கப்படுத்தி, கற்பித்து நமக்கு பேருதவி செய்துள்ளனர்.


இந்த உயிர் ஆற்றல் சிகிச்சைமுறை வேலை செய்யுமா? செய்யும்!

ஆதாரத்தை நாளை பார்ப்போம்.

தீப ஆராதனை



தீப ஆராதனை நாம் எப்படி செய்வோம்?

ஏன் அப்படி செய்கிறோம்? சிந்தியுங்கள்! அதன் உண்மையான அர்த்தம் நாளை பார்ப்போம்.